மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து பருத்தித்துறை பிரதேச சபையின் முன்மாதிரியான செயற்பாடு
Jaffna
Cyclone Ditwah
By Erimalai
யாழ் வடமராட்சி கிழக்கு கரையோர பகுதிகளில் காணப்படும் குப்பைகள் பருத்தித்துறை பிரதேச சபையால் இன்று(18) தூய்மைப்படுத்தப்பட்டது.
பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஷ் தலைமையில் இன்று காலை 7:30 மணியிலிருந்து தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாமுனை தொடக்கம் கட்டைக்காடு கரையோரப் பகுதிகளில் காணப்பட்ட குப்பைககளே இவ்வாறு தூய்மைப்படுத்தப்பட்டது .
கரையோரப் பகுதிகளில் குப்பைகள்
டித்வா புயலினால் கரையோரப் பகுதிகளில் குப்பைகள் அதிகளவாக தேங்கி காணப்பட்டன.வீதி ஓரங்களில் குப்பைகள் காணப்படுவதனால் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் ,உடனடியாக அகற்றுமாறும் கடந்த காலத்தில் மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்துவந்தார்கள்

மக்களின் கோரிக்கைக்கு அமைவாக பருத்தித்துறை பிரதேச சபையால் வடமராட்சி கிழக்கு கரையோர பகுதிகளில் காணப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்