இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக செயற்படும் மதகுருமார் - பாப்பரசரின் பிரதிநிதி விமர்சனம்

Sri Lanka Buddhism
By Vanan Aug 15, 2023 02:51 PM GMT
Report

இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராகச் செயற்படும் கடும்போக்கு பௌத்த பிக்குகள் மீதான கடுமையான விமர்சனம் ஒன்றை சிறிலங்காவுக்கான பாப்பரசரின் பிரதிநிதியான பிரையன் உடைக்வே ஆண்டகை வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று மன்னார் மடுத்திருப்பதியில் திருவிழாவில் பங்கேற்றிருந்த நிலையில், அவரின் விமர்சனம் வெளிப்பட்டுள்ளது.

மதத் தலைவர்களுக்கான பாரிய பொறுப்பு

இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக செயற்படும் மதகுருமார் - பாப்பரசரின் பிரதிநிதி விமர்சனம் | Clergy Working Against Reconciliation In Sri Lanka

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் பிரசன்னப்பட்டிருந்த நிலையில் இந்தக்கருத்தை  அவர் வெளியிட்டிருந்தார்.

இதன்போது நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டிய பாரிய பொறுப்பு மதத்தலைவர்களுக்கு உண்டென சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், நாட்டைப் பிளவுபடுத்தும் முகவராக மாறுவதா அல்லது நாட்டை ஒன்றிணைக்கும் தலைவராக மாறுவதா என்பதை சில மதத்தலைவர்கள் தீர்மானிக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மக்களுக்கு எதிரான நிலைப்பாடு

இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராக செயற்படும் மதகுருமார் - பாப்பரசரின் பிரதிநிதி விமர்சனம் | Clergy Working Against Reconciliation In Sri Lanka

இலங்கையில் தமிழ்மக்களுக்கு எதிரான நிலைப்பாடுகளையும் 13 ஆம் திருத்தத்துக்கு எதிரான நிலைப்பாடுகளையும் சிறிலங்காவின் முக்கியமான பௌத்த பிக்குகள் தீவிரப்படுத்திவரும் நிலையில் இலங்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டிய பாரியபொறுப்பு மதத்தலைவர்களுக்கு உண்டு என்ற செய்தியை பாப்பரசரின் பிரதிநிதி இன்று தெரிவித்துள்ளார்.

13 ஆம் திருத்ததை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புத்திதெளிவு ஏற்படவேண்டுமெனக்கோரி சிறிலங்காவின் பௌத்த பேராசிரியராக தன்னை அடையாளப்படுத்தும் மெதகொட அபயதிஸ்ஸதேரர், நேற்று தனது பெப்பிலியான சுனேத்ராதேவி பிரிவெனா ஆலய வளாகத்தில் சிறப்பு பூசை ஒன்றை நடத்தியிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை மடுதேவாலயத்தின் இடம்பெற்ற திருவிழாவில் பங்கேற்ற பாப்பரசரின் பிரதிநிதி நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் சிதைக்கும் மதத்தலைவர்கள் குறித்த எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கும் அவர் பாராட்டு தெரிவித்ததுடன், ரணில் விக்ரமசிங்கவுக்கு வத்திக்கான் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவு கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025