திருகோணமலையில் கடல் சீற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் கடல் சீற்றமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை டச் பே கடற்கரையில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்திருப்பதனால் காவல்துறை உயிர்காப்புப் பிரிவினரால் சிவப்பு எச்சரிக்கைக் கொடி பறக்கவிட்டப்பட்டுள்ளது.
உள்வாங்கியுள்ள கடல்
அத்துடன், சுற்றுலாப் பயணிகள் அதிகமாக குளிக்கும் இடத்தில் கடல் அதிகபடியாக உள்வாங்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, கடல் அலையின் சீற்றம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தமது படகுகளை கரையோரத்தில் இருந்து வீதிக்கு அப்பறப்படுத்தி வருகின்றார்கள்.
திருகோணமலை வீரநகர் உள்ளிட்ட கரையேபரப் பகுதியில் உள்ள மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துள்ளதோடு தமது படகுகளை பாதுகாப்பு கருதி வீதியோரங்களுக்கு அப்புறப்படுத்தியும் வருகின்றார்கள்.

தமது படகுகளை பாதுகாப்பா வைத்திருப்பதற்கு தமக்கு இடம் இல்லை எனவும் இதனால் வீதிக்கு கொண்டு வரவேண்டி இருப்பதாகவும், எதிர்வரும் 10ஆம் திகதிக்குப் பின்னர் கடல் அலையைப் பார்த்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |