இடிந்து விழுந்த கொழும்பு - காலி வீதி பழைய பாலம்

Colombo Jaffna Sri Lanka Weather
By Kanooshiya Nov 27, 2025 04:32 AM GMT
Report

புதிய இணைப்பு

கொழும்பு - காலி வீதியின் பெந்தோட்டை பழைய பாலம் இடிந்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு பாலம் இடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலாம் இணைப்பு 

நாடளாவிய ரீதியில் தற்போது நிலைக்கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் படிப்படியாக தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடிந்து விழுந்த கொழும்பு - காலி வீதி பழைய பாலம் | Climate In Sri Lanka Rain

அதன்படி, தற்போது இலங்கைக்கு தென்கிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் வடக்கு - வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடிந்து விழுந்த கொழும்பு - காலி வீதி பழைய பாலம் | Climate In Sri Lanka Rain

பொதுமக்கள் அவதானம்

இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த கொழும்பு - காலி வீதி பழைய பாலம் | Climate In Sri Lanka Rain

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப் படுவதுடன், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

யாழில் சீரற்ற காலநிலை - பலர் பாதிப்பு: களமிறங்கும் உலங்கு வானூர்திகள்

யாழில் சீரற்ற காலநிலை - பலர் பாதிப்பு: களமிறங்கும் உலங்கு வானூர்திகள்

தெஹிபாலேவுக்கு சொந்தமான படகுகள் பறிமுதல்!

தெஹிபாலேவுக்கு சொந்தமான படகுகள் பறிமுதல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!         

Gallery
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016