முக்கிய குற்றவாளி கஞ்சிபாணி இம்ரானின் நெருங்கிய சகா சிக்கினார்!
பிரபல பாதாள உலக கும்பல் உறுப்பினர் கஞ்சிபாணி இம்ரானின் நெருங்கிய கூட்டாளியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயதான பாதாள உலகக் குழு உறுப்பினரான முகமது மணிலார் முகமது அர்ஷத் என்பவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பில் உள்ள வொல்பென்டல் தெருவில் வசித்து வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
மனைவி மற்றும் குழந்தைகள்
இவர், விசா மற்றும் கடவுச்சீட்டு இல்லாமல் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ள நிலையில், இந்திய அதிகாரிகளால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டள்ளார்.
விசாரணைகளின்படி, அர்ஷத் முதலில் 2017 இல் துபாய்க்குத் தப்பிச் சென்றார். 2019 இல் துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் பிறந்தநாள் விழாவின் போது மகந்துரே மதுஷ் உட்பட பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட பின்னர், கைது செய்யப்படுவதைத் தவிர்க்க அவர் இந்தியாவுக்குச் சென்றார்.
இந்நிலையில், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இன்னும் இந்தியாவில் வசித்து வருவதாகவும், செல்லுபடியாகும் விசாக்கள் மற்றும் கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், விசாரணைகளுக்காக அர்ஷத் தற்போது காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
