கொழும்பு - கண்டி பிரதான வீதியை மூடுவதற்கு நடவடிக்கை
Colombo
Kandy
By Dharu
கொழும்பு-கண்டி பிரதான வீதியானது இன்று (23) இரவு 11.00 மணி முதல் நாளை (24) காலை 6.00 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை மையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலியால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சரிந்து விழும் அபாயத்தில் உள்ள பாறைகள்
கடுங்கன்னாவப் பகுதியில் வீதியில் சரிந்து விழும் அபாயத்தில் உள்ள பாறைகளை அகற்றும் பணி காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, வீதி மூடப்பட்டிருக்கும் காலத்தில், சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி