களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தாத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில்
மேலதிக நேரக் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கி மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று திங்கட்கிழமை(23.11.2026) வைத்தியசாலைக்கு முன்பாக அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பல கோரிக்கைகள் உள்ளடக்கிய வாசகங்களை காட்சிப்படுத்தி குறித்த ஆர்ப்பட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்படி கடமை நேரத்திற்கு மேலதிகமாக பணியாற்றும் தாதிய உத்தியோகஸ்த்தர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்க வேண்டும், முன்மொழியப்பட்ட தாதியர் ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அடிப்படை நிதி ஒதுக்கீடுகளைச் செய்தல் வேண்டும், விசேட கொடுப்பனவு 20000 ரூபா அதிகரித்தல் வேண்டும், தாதியர் சேவையில் நிலவும் சம்பள மற்றும் சேவைக் கொடுப்பனவு பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும், ஆபத்துக் கொடுப்பனவை 15 வீத்தால் வழங்கு, தாதியர் சேவையின் சரக்கு மற்றும் கையிருப்பு முகாமைத்துவ பொறுப்பிற்கான கொடுப்பனவை 5000 ரூபா வழங்க வேண்டும் போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு தாதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டிருந்தனர்.




விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |