கிளப் வசந்த படுகொலை: அமல் சில்வாவிற்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

Dilakshan
in சட்டம் மற்றும் ஒழுங்குReport this article
கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பான விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடுவெல பதில் நீதவானால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு இதன் போது உத்தரவிடப்பட்டுள்ளது.
29ஆம் திகதி காலை அமல் சில்வா கைது செய்யப்பட்டு பின்னர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கைது நடவடிக்கை
இவர் கொலையை செய்ய வந்த நபர்களுக்கு தங்குமிட வசதி மற்றும் ஆதரவை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் மேற்கு தெற்கு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
ஜூலை 8 ஆம் திகதி அதுருகிரியில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த என்பவரை சுட்டுக் கொன்றதற்காக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த காரின் சாரதி ஆகியோர் கடந்த 28 ஆம் திகதி இரவு பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின்அடிப்படையில் குறித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினரை கைது செய்ய முடிந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
