ஈழத் தமிழ் உறவுகளுக்கு இதை செய்யுங்கள்! - தமிழக முதல்வரிடம் கோரிக்கை

India Tamil Tamil Nadu V.Gowthaman
By Chanakyan Jun 03, 2021 06:36 AM GMT
Report

உயிர் பிழைக்க உலகம் முழுக்க சிதறியது ஈழத் தமிழினம். ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், நம் தாய்த் தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தார்கள். மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக, நம் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு, தமிழ்நாட்டின் முதல்வர் இனியும் காலம் தாமதிக்காமல், "இரட்டை குடியுரிமை" வழங்க வேண்டுமென்று தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

1981ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களின் அறிவுக் களஞ்சியமான யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1983ஆம் ஆண்டு, ஜூலை கலவரத்தில், சிங்கள அதிகார வர்க்கத்தினரால் திட்டமிட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான அறிக்கை ஒன்றினை அவர் இன்று வெளியிட்டு்ளளார். அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அந்த அறிக்கையில்,

ஏறத்தாழ 40 ஆண்டுகளாக, நம் தமிழ் மண்ணில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களில், 70 ஆயிரம் பேர் அகதிகள் முகாம்களிலும், 30 ஆயிரம் பேர் அரசாங்கத்தில் பதிந்து, வெளியில் வீடு எடுத்தும் தங்கி இருக்கிறார்கள்.

அமெரிக்கா, கனடா, லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் எத்தனையோ பேர் அந்நாட்டின் உயர் பதவிகளை அலங்கரிக்கிறார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

ஆனால் இங்கிருப்பவர்களில் ஒருவர் கூட, உயர்படிப்பு படித்தோ அல்லது படித்த படிப்பிற்கான மதிப்பில் அரசாங்கத்திலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ இதுவரையில் வேலைக்கு செல்ல முடியவில்லை. அதற்கு காரணம் இந்திய ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மைதான்.

திபெத்திய அகதிகளுக்கு கிடைக்கக் கூடிய சலுகைகள் கூட ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கவிடாமல் மறுக்கப்படுகிறது. சிங்கள அதிகார வர்க்கத்தின் திட்டமிட்ட இன அழிப்புக்கு பிறகு அவர்கள் இன்னும் கூடுதலான வலிசுமந்த வாழ்க்கையைத்தான் நம் தமிழ்நாட்டிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத் தமிழ்ச் சொந்தங்கள், இந்திய ஒன்றிய அரசு எங்கள், "தந்தையர் தேசம்", தமிழ்நாடு எங்கள் "தொப்புள்கொடி" உறவுகள் வாழ்கின்ற தாய்மடி என நம்பி வந்தவர்கள்.

ஆனால் இன்றுவரை வாழ வழியற்று நின்று கொண்டிருக்கிறார்கள்.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை வாக்குறுதியின்படி அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது மட்டுமே, இருண்டு கிடக்கும் அவர்களின் வாழ்வின் மீதமுள்ள காலத்தையாவது அழகானதொரு வாழ்க்கையாக வாழ காரணமாக அமையும். ராஜபக்க்ஷவின் கொடூர சித்திரவதை முகாம்கள் உலகம் அறிந்ததே.

ஏறக்குறைய அந்த முகாம்களுக்கு இணையானதுதான் திருச்சி சிறப்பு முகாம். யுத்தம் முடிந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்தும் கூட இன்றும் அந்த முகாம் தமிழ்நாட்டில் நிலை கொண்டிருப்பது வேதனையிலும் பெரும்வேதனை.

போரில் மாண்டது போக, தஞ்சம் தேடி ஓடி வந்த தாய்த் தமிழ்நாட்டிலும் அவர்களை அடைத்து வைத்து, அவர்களின் பெற்றோர், மனைவி, குழந்தைகள் மற்றும் உறவுகளோடு கூடி வாழ முடியாத ஒரு சூழலை உருவாக்கி, சிறப்பு முகாம் என சிறையில் அடைத்து வைத்திருப்பது எத்தகைய அறம்? 110 பேர் கொண்ட அந்த சிறப்பு முகாமில், 80 பேர் ஈழத் தமிழர்கள்.

எத்தனையோ முறை தமிழ்நாட்டு தலைவர்களோடு, நாங்களும் இதற்கு முந்தியிருந்த அரசாங்கத்திடமும், அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்தும் கூட இன்னும் அந்த முகாம் மூடப்படாமல் சித்திரவதைக் கூடமாக இருக்கிறது. நீதிமன்றத்திற்கு இது வரை அழைத்துச் செல்லாமலும், நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும்கூட சிலரை விடுதலை செய்யாமலும், அப்பாவி ஈழத் தமிழர்கள் அநேகம்பேர் அங்கு தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலுள்ள கொடும் குற்றவாளிகளுக்கு தமிழ்நாட்டின் மத்திய சிறைச்சாலைகளில் தண்டனை தந்து விட்டு, அப்பாவி ஈழத் தமிழர்களை முழுவதுமாக விடுவித்து திருச்சி சிறப்பு முகாமை இனியாவது நிரந்தரமாக இழுத்து மூடுங்கள்.

இந்நிலையில் கூட அங்கு சிறைபட்டுக் கிடக்கும் 80 ஈழத் தமிழர்களும் தங்களது உணவிற்கான பணத்தைச் சேமித்து, ரூ.18 ஆயிரத்தை, முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பாக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அரசு ஒதுக்கியிருக்கும் அகதிகள் முகாம்களின் வீடு என்பது பத்தடிக்கு பத்தடி மண்குடிசை ஆகும். மழைக் காலங்களில் சுவர் இடிந்தும், கூரை பறந்தும் நம் தமிழீழ உறவுகள், நம்முடைய தாய்த் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் எண்ணற்ற உயிர்களைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மழைக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு சிமெண்டாலான "கான்கிரீட் " தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்து ஒரு பாதுகாப்பான வாழ்க்கை வாழ வழி செய்யுங்கள்.

ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தந்தும், தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுத்தும் சித்திரவதை முகாம் என்கிற திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக இழுத்து மூடி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தும் ஈழத்தமிழர்கள் வாழ்க்கையில் தாயுள்ளத்தோடு அழகானதொரு விளக்கேற்றி வைக்கும் படி, தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என அநத அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025