பற்றாக்குறை ஒருபோதும் ஏற்படாது - அமைச்சர் அளித்துள்ள உறுதிமொழி
coconutoil
rameshpathirana
meetiing
By Jaso
நாட்டில் ஒரு போதும் தேங்காய் எண்ணெய்க்கான பற்றாக்குறை எதிர்காலத்தில் ஏற்படப் போவதில்லையென அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
தேங்காய் எண்ணெய் தொடர்பாக எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகள் குறித்து கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
பொறுப்புவாய்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள், பேக்கரி சார்ந்த உணவுகளை தயாரிப்பவர்கள், இனிப்பு பண்டங்களை தயாரிப்பவர்கள் ஆகியோரின் பங்கேற்றலுடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
நாட்டில் இரு வார காலங்களுக்கு மாத்திரமே தேங்காய் எண்ணெய் காணப்படுவதாக இதன் போது இனிப்பு பண்டங்களை தயாரிக்கும் சங்கமும் பேக்கரி சார்ந்த உணவுகளை தயாரிப்பவர்களும் தெரிவித்தனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்