இலங்கைக்கு கிடைத்துள்ள மில்லியன் டொலர் வருமானம்
நாட்டிற்கு ஏற்றுமதி வருமானம் மூலமாக 1118.06 மில்லியன் டொலர் 2024 ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான காலப் பகுதியில் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த வருமானம் தேயிலை, இறப்பர், தென்னை, கறுவா மற்றும் மிளகு போன்ற பெருந்தோட்டப் பயிர்களின் ஏற்றுமதி ஊடாகவே கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் (Ministry of Agriculture) இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வருமானம்
2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் நாட்டின் பெருந்தோட்டப் பயிர்களினால் ஈட்டப்பட்ட ஏற்றுமதி வருமானம் 884.6 மில்லியன் டொலர்களாகும்.
அதன்படி கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் பெறப்பட்ட ஏற்றுமதி வருமானத்தை விட 234 மில்லியன் டொலர்கள் வருமானம் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் பெற முடிந்துள்ளது.
உலகின் வேகமாக வளர்ச்சியடையும் துறைமுகம்
இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கொழும்பு (Colombo) துறைமுகம் உலகின் வேகமாக வளர்ச்சியடையும் துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளதாக கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ்.ருவன்சந்திர (K. D. S. Ruwanchandra) தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், 2023ஆம் ஆண்டில் இலங்கை துறைமுக அதிகாரசபை 100 மில்லியன் அமெரிக்க டொலர் இலாபத்தைப் பதிவுசெய்துள்ளதுடன் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |