இலங்கையில் மீண்டும் உச்சம் தொடும் தேங்காய் விலை
                                    
                    Sri Lanka
                
                                                
                    Sri Lankan Peoples
                
                                                
                    Economy of Sri Lanka
                
                                                
                    Coconut price
                
                        
        
            
                
                By Sathangani
            
            
                
                
            
        
    இலங்கையில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை தென்னைப் பயிர்செய்கை சபையின் (Coconut Cultivation Board) தலைவர் சுனிமல் ஜயக்கொடி (Sunimal Jayakody) தெரிவித்துள்ளார்.
180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய், தற்போது 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேங்காய் அறுவடை
எனினும், மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் அறுவடை 500 மில்லியனை தாண்டும் என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் தேங்காயின் விலை மீண்டும் குறைவடையும் என்று தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்