தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
நாட்டில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் சிறிய தேங்காய் ஒன்று 150 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
வடக்கு தென்னை முக்கோணம்
நாட்டில் தென்னை அறுவடையை விருத்தி செய்ய நாடே சுபீட்சம் ஆக்கும் விருட்சம் என்ற தொலைநோக்கு கருப்பொருளின் கீழ் வடக்கு தென்னை முக்கோணம் எனும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் பருத்தித்துறை, சிலாவத்துறை, மற்றும் கொக்கிளாய் ஆகிய மூன்று நகரங்களை இணைத்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மற்றும் வவுனியா ஆகிய 5 மாவட்டங்களையும் உள்ளடக்கி செயற்படுத்தப்படும்.
அயடீன் கலந்த உப்பு தூள்
இதேவேளை, தேசிய உப்பு நிறுவனம் அயடீன் கலந்த லக் உப்பின் (lak lunu) விலையைக் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, 400 கிராம் அயடீன் கலந்த உப்பு தூள் பாக்கெட்டின் விலை ரூ.20 குறைக்கப்பட்டுள்ளது, மேலும் 1 கிலோகிராம் உப்புப் தூள் பாக்கெட்டின் விலை ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது.
400 கிராம் உப்புப் தூள் பாக்கெட் ரூ.100 விலையிலும், 1 கிலோகிராம் உப்புப் தூள் பாக்கெட் ரூ.200 விலையிலும், 1 கிலோகிராம் உப்புக் பாக்கெட் (கட்டிகள்) ரூ.150 விலையிலும் விற்பனை செய்யப்படும்.
அம்பாந்தோட்டை மகாலேவே, பூந்தல லேவே மற்றும் பலடுபன லேவே ஆகியவற்றில் உப்பு அறுவடை ஏற்கனவே தொடங்கியுள்ளதால், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த வழியில் விலைகள் குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

