ரணிலின் வழக்கு விசாரணை இன்று : ஐ.தே.க விடுத்துள்ள வேண்டுகோள்
நாட்டின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடவோ, அத்தகைய நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்க வேண்டாம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளது.
கட்சியின் இணைத் தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஆறு முறை பிரதமராக இருந்தவர், மிகவும் நெருக்கடியான தருணத்தில் நாட்டின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர், நாட்டிற்கு அமைதியைக் கொண்டு வந்தவர், கட்சி பேதமின்றி அனைவராலும் மதிக்கப்படும் மற்றும் ஏற்றுக்கொள்ளப்படும் தலைவர் என்பது இரகசியமல்ல.
நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்தவர்
அவர் ஒருபோதும் தனது சொந்த நலன்களுக்காகச் செயற்பட்டதில்லை, இந்த நாட்டை இப்போது இருப்பதை விட சிறந்த இடத்திற்கு உயர்த்த எப்போதும் உறுதிபூண்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்ரமசிங்கவால் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட கொள்கைகளால் நாடு இன்று இந்த நிலையில் உள்ளது என்பதை நினைவுகூரும் ஐக்கிய தேசியக் கட்சி, இன்று சிறையில் இருக்கும் தலைவர் ஒரு முக்கியமான தருணத்தில் நாட்டைக் காப்பாற்றிய தலைவராவார்.
ரணில் விக்ரமசிங்க அவர்கள் விசாரணைகளை தொடர்வதற்கு ஆதரவளித்த நீதித்துறையை மதித்து வந்த ஒரு சிரேஷ்ட தலைவர் என்ற ரீதியில் அனைவருக்கும் மரியாதைக்குரிய நம்பிக்கை இருக்கின்றது” என ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



