பிரித்தானிய பிரஜைகளை அழைத்து செல்ல மத்திய கிழக்கில் தயாராகியுள்ள விமானம்
மத்திய கிழக்கை விட்டு வெளியேற விரும்பும் பிரித்தானிய பிரஜைகளுக்கு உதவுவதற்காக, அந்நாட்டு அரசாங்கம் ஓமானிலிருந்து ஒரு வணிக விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விமானம் மார்ச் 4 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி 23:00 மணிக்கு (GMT 19:00) மஸ்கட்டில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களை முதலில் அழைத்துச் செல்லும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம்
ஐக்கிய அரபு இராச்சியம் தங்கள் இருப்பைப் பதிவுசெய்து தற்போது ஓமானில் இருக்கும் பிரித்தானியா பிரஜைகள் இந்தப் படிவத்தை அவசரமாக நிரப்ப வேண்டும் என்று வெளியுறவு அலுவலகம் கூறுகிறது.

வெளியுறவு அலுவலகத்தால் அழைக்கப்படாவிட்டால், விமான நிலையத்திற்கு மக்கள் வர வேண்டாம் என்று அறிக்கை வலியுறுத்தியது.
மக்கள் பிரித்தானியாவுக்கு திரும்புவதற்கான கூடுதல் வழிகளைக் கண்டறிய விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றும் என்றும் அது மேலும் கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |