அலறும் அரசு - JVP தலைமை அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு
Anura Kumara Dissanayaka
Janatha Vimukthi Peramuna
Ranil Wickremesinghe Arrested
By Independent Writer
பத்தரமுல்லை பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (Janatha Vimukthi Peramuna) தலைமை அலுவலகத்திற்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு மேலதிகமாக, சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
சாலைகளை மூட நடவடிக்கை
இதன் விளைவாக, கொழும்பில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கூடுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பல இடங்களில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அருகிலும் காவல்துறை கலகத் தடுப்புப் பிரிவினர் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில அணுகல் சாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சாலைத் தடைகளும் வைக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்