தென்னிலங்கையில் குவிக்கப்படும் இராணுவம் - அவசர அவரசமாக அரசு நடவடிக்கை
தென் மற்றும் மேல் மாகாணங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த இன்று (26) முதல் இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda wijepala) தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் அதிகமாக பதிவாகும் காரணத்தாலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
இதேவேளை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கக்கு எதிரான வழக்கு இன்று (26) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இதனால், கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் மக்கள் கூட்டம் கூடும் என்பதால் நீதிமன்றத்தை அண்டிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கபட்டுள்ளன.
காவல்துறையினரும் சிறப்புப் படையினரும் பாதுகாப்புக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

