நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்கு தடையாக அரச படைகள் - சபையில் சாடிய ரவிகரன் எம்பி

Sri Lanka Army Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Army Day Coconut price
By Thulsi Feb 06, 2025 02:16 AM GMT
Report

நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்குத் தடையாக இந்த இலங்கை அரச படைகளே காணப்படுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (Thurairasa Ravikaran) நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தெங்குப் பயிர்ச்செய்கை காணிகள் உட்பட பல காணிகளை அரச படைகள் அபகரித்து வைத்துக் கொண்டு உள்ளதாகவும்,  குறித்த காணிகள் இராணுவத்தின் பிடியிலிருந்து உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (05.02.2025) இடம்பெற்ற ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்

விவசாயிகளுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்

தேங்காய் ஏற்றுமதிக்கு இடையூறுகள்

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான விவாதத்திலே நான் குறிப்பட விரும்புவது என்னவெனில். தேங்காய் ஏற்றுமதி செய்வதற்கு இடையூறுகள் காணப்படுகின்றன.

நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்கு தடையாக அரச படைகள் - சபையில் சாடிய ரவிகரன் எம்பி | Coconut Price Increase And Coconut Import Issue

குறிப்பாக வடக்கு கிழக்கில் மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினர் இன்னமும் விடுவிப்புச் செய்யப்படவில்லை.

புதிய ஆட்சியின் பின்னர் வடக்கு கிழக்கில் ஒரு சில இராணுவ முகாம்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் இன்றளவில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மக்களின் வாழ்வாதார நிலங்கள் படையினரின் வசமே உள்ளது.

பூர்வீக நிலங்களை இழந்து அகதிகளாக இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர்களின் அரவணைப்பிலுமே இவர்களின் வாழ்க்கை கழிகின்றது. போர் மௌனித்து பதினைந்தாண்டுகள் ஆகியும் கூட இன்னமும் அகதிகளாக நாட்டின் குடிமக்கள், தமிழ் மக்கள் வாழும் அவலநிலையை எண்ணிப்பாருங்கள். 

தேங்காய் தட்டுபாட்டிற்கு தீர்வு : வெளியான அதிரடி அறிவிப்பு

தேங்காய் தட்டுபாட்டிற்கு தீர்வு : வெளியான அதிரடி அறிவிப்பு

இடைத்தங்கல் முகாம்களிலிருந்து பெருமூச்சு 

தமிழர்களை அவர்களின் வாழிடங்களிலேயே வாழவிடுங்கள். இவற்றில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் பிரிவில் கேப்பாபிலவு, புலக்குடியிருப்பு மக்களின் அவலநிலை இன்னும் தீர்ந்தபாடில்லை. அதிலிருந்து மீண்டவர்கள் சிலர்.

நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்கு தடையாக அரச படைகள் - சபையில் சாடிய ரவிகரன் எம்பி | Coconut Price Increase And Coconut Import Issue

இன்னும் 54 குடும்பங்கள் தங்களைத் தங்களுடைய பூர்வீக இடத்தில் குடியமர்த்தமாட்டார்களா என்ற ஏக்கத்தோடு இடைத்தங்கல் முகாம்களிலிருந்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றார்கள். தங்களுடைய சொந்த இடத்தில் இருந்தபோது எந்தக்குறையும் தங்களுக்கு இல்லை.

வளமான பூமி, ஒருபக்கம் ஆறு அதனால் மீன், இறாலுக்கு பஞ்சமில்லை. தங்களுடைய காணியில் குடியிருப்பு நிலம் தவிர்ந்த மிகுதி நிலத்தில் காலங்களுக்கேற்ப பயன்தரக்கூடிய தோட்டச்செய்கை, வயல்கள், இதுதவிர தென்னைகள் தாராளமாக ஒவ்வொரு காணிகளிலும் உண்டு, இன்றைய தேங்காயின்விலை மிகமிக அதிகம்.

காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை

எண்ணிப்பாருங்கள் மக்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள். இப்படி சகல விதத்திலும் தங்களின் பூர்வீக காணிகளில் பயன்பெற்று வாழ்வாதாரத்தை ஈடுசெய்து வாழ்ந்துவந்த குடும்பங்கள், தற்போது மிகவும் நொந்து போயுள்ளார்கள்.

நாட்டின் தேங்காய் ஏற்றுமதிக்கு தடையாக அரச படைகள் - சபையில் சாடிய ரவிகரன் எம்பி | Coconut Price Increase And Coconut Import Issue

நான் ஏற்கனவே குறிப்பிட்ட 54குடும்பங்களின் 55 ஏக்கர் நிலம் விடுபடாமல் இராணுவம் அபகரித்து வைத்துள்ளது.

இதில் சில காணிகள் பலத்த நில மீட்புப் போராட்டங்களின் பின்பு தான் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டன. அதேபோல அந்த மக்களின் பிரதிநிதியாகக் கேட்கின்றேன்.

54 குடும்பங்களின் காணிகளையும் விடுவிப்புச் செய்யுங்கள். பொறுப்பாக இருக்கும் அமைச்சுக்கள் இந்த மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்

அமெரிக்காவில் காணாமல் போன முட்டைகள்

அமெரிக்காவில் காணாமல் போன முட்டைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024