தேங்காய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு சந்தையில் பெரிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 175 முதல் 185 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சிறிய தேங்காய் ஒன்றின் மொத்த விலை 150 முதல் 165 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகளின் பிரச்சினை
இதேவேளை, அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220 ரூபாவுக்கும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 150 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது

குறித்த விடயத்தை விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த நேற்று (11) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.
உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் பயிரிடும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைத்து அமைச்சர் இந்தக் கொள்வனவு விலைத் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
இதன் விளைவாக, சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை ஒரு கிலோகிராம் ரூபா 200 வரையிலும், உருளைக்கிழங்கின் விலை ஒரு கிலோகிராம் ரூபா 300 வரையிலும் உயரும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |