நாட்டில் மீண்டும் உச்சம் தொட்ட தேங்காய் விலை
நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது நுகர்வோர் முன்னணி (Consumers' Front) குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
அதன்படி, தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அந்த முன்னணியின் தலைவர் அசேல சம்பத் (Asela Sampath) தெரிவித்துள்ளார்.
தேங்காய் விற்பனை
அத்துடன் தற்போது சந்தையில் 245 ரூபா முதல் 250 ரூபா வரையில் தேங்காய் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த வருடத்தின் மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Coconut Research Institute - Lunuwila) தலைவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தேங்காய் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேங்காய் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
