தெங்கு உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி மூலம் பல மில்லியன் டொலர் வருமானம்!
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தெங்கு மற்றும் அதனைச் சார்ந்த உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 640 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதில் 25 சதவீதமான வருமானம், தென்னை நார்த் தூள், தென்னை நார், தேங்காய்த் துண்டுகள் மற்றும் தேங்காய் ஓட்டிலிருந்து தயாரிக்கப்படும் கரி உள்ளிட்ட உப உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி மூலம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
1,222 மில்லியன் அமெரிக்க டொலர்
கடந்த ஆண்டு தெங்கு மற்றும் அதனைச் சார்ந்த உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி மூலம் 1,222 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் தெங்கு ஏற்றுமதி வருமானம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 21 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |