இஸ்ரேல் தேர்தல்: ஆட்சி அமைக்கத் பெரும்பான்மையை தவறிய நெதன்யாகு கூட்டணி
Benjamin Netanyahu
Israel
Election
World
By Pavi
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்ட பின்னரும், இறுதி ஆசனப் பகிர்வில் மாற்றம் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53 ஆசனங்களையும், எதிர்க்கட்சிக் கூட்டணி 48 ஆசனங்களையும், அரபுக் கட்சிகள் 19 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 ஆசனங்களில் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைப்பதற்கு 61 ஆசனங்கள் அவசியமாகும்.
61 ஆசனங்கள்
எனினும், எந்தவொரு தரப்பும் தனித்து பெரும்பான்மையைப் பெறாத நிலையில், ஆட்சி அமைப்பதற்காகப் பிற கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இடைத்தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது பாரிய குண்டுமழை : ட்ரம்பின் பச்சைக்கொடிக்கு காத்திருக்கும் அமெரிக்க இராணுவம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்