கிளிநொச்சி மகா வித்தியாலய காணி விடுவிப்பு விவகாரம்: ரஜீவன் எம்.பி களவிஜயம்!
கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணியை விடுவிக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாடசாலையின் ஒரு பகுதி நிலப்பரப்பு இன்னமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் நிலையில், அதனை நேரில் பார்வையிட்டு நிலைமைகளை ஆராய்வதற்காகவே இந்த விஜயம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்
இக்களவிஜயத்தின் போது, இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட எல்லைப் பகுதிகளைப் பாடசாலையின் அதிபர், நாடாளுமன்ற உறுப்பினருக்கு நேரில் காண்பித்து நிலைமைகளை விளக்கியதாக கூறப்படுகிறது.

பாடசாலை சமூகத்தின் நலன் கருதி இக்காணியை விரைவாக விடுவிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |