தஞ்சம் புகுந்த தமிழர்களை சிங்கள அரசின் பாணியில் கையாளும் திருச்சி சிறப்பு முகாம்: கௌதமன் ஆதங்கம்

Sri Lankan Tamils India
By Independent Writer Oct 29, 2026 10:05 AM GMT
Report

இந்தியா எங்கள் தந்தையர் நாடு என்கிற உரிமையோடு தமிழீழத் தமிழர்கள் இங்கு தஞ்சம் புகுந்திருந்த நிலையில், சிங்கள தரப்புக்கு சற்றும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என சவால் விட்டு பிரகனப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் ஒரு சிறப்பு முகாம் அமைந்துள்ளது என தமிழ்நாட்டின் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

அங்கிருந்து உயிர் பிழைத்து வாழ வரும் ஈழத் தமிழர்களைக் கூட்டம் கூட்டமாக அடைத்து வைத்து அவர்கள் மீது அடுக்கடுக்கான பொய் வழக்குகளை சுமத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் தண்டனைக் காலம் முடிந்திருந்த நிலையிலும் விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்தி, இழுத்தடிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் தனது முகநூல் பதிவில் பின்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

விஜேதாச ராஜபக்ச மகனின் வீட்டில் திடீர் சோதனை: தொலைபேசியை நிறுத்திவிட்டு தப்பியோட்டம்

விஜேதாச ராஜபக்ச மகனின் வீட்டில் திடீர் சோதனை: தொலைபேசியை நிறுத்திவிட்டு தப்பியோட்டம்

ஏறத்தாழ 50 ஆண்டுகள்

“இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்தும் இப்படிப்பட்ட இரக்கமற்ற நிகழ்வுகளுக்கு எனது சார்பிலும் உலகத் தமிழர்கள் சார்பிலும் ஆகப்பெரும் கசப்போடு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தஞ்சம் புகுந்த தமிழர்களை சிங்கள அரசின் பாணியில் கையாளும் திருச்சி சிறப்பு முகாம்: கௌதமன் ஆதங்கம் | Issues At The Trichy Camp Krishnakumar

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள அரக்கப் பிடியிலிருந்து விடுபட்டு உலகம் முழுக்க சிதறி விழுந்த ஈழத் தமிழினம் இந்திய ஒன்றியத்தை அடிமைப்படுத்தி ஆண்ட லண்டனிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கனடா மற்றும் அமெரிக்க பெரும் தேசங்களிலும் அரசு அதிகாரிகளாக ஆகப்பெரும் செல்வந்தர்களாக அந்தந்த நாடுகளின் வலிமை மிக்க அமைச்சர்களாக மாண்புடனும் தன்மானத்துடனும் கோலொச்சிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்ந சூழலில், இந்திய ஒன்றியத்தில் அதிலும் எட்டுக் கோடி தமிழர்கள் வாழ்கின்ற தாய்த் தமிழ்நாட்டில் மட்டும் அடிமைகளாகவும், அகதிகளாகவும், நிர்கதியற்ற கைதிகளாகவும் வாழ வைத்துக் கொண்டிருப்பதென்பதனை என்னும்போது மனம் கூனிக்குறுகுகிறது.

கிளிநொச்சி மகா வித்தியாலய காணி விடுவிப்பு விவகாரம்: ரஜீவன் எம்.பி களவிஜயம்!

கிளிநொச்சி மகா வித்தியாலய காணி விடுவிப்பு விவகாரம்: ரஜீவன் எம்.பி களவிஜயம்!

சிறை வாழ்க்கையில் சித்திரவதை

26.10.2026 அன்று காலை எவ்வித முன்னறிவிப்புமின்றி ஈழத்தமிழர்களான கிருஷ்ணகுமார் என்பவரையும் சுபாஷ்கரன் என்பவரையும் இலங்கைக்கு புறப்படுமாறு பட்டாலியன் கணக்கில் காவல் துறையினரை இறக்கி திருச்சி சிறப்பு முகாமை முற்றுகையிட்டு நாடுகடத்த பலவந்தப் படுத்தியிருக்கிறார்கள்.

கிருஷ்ணகுமார் என்பவர் பதிமூன்று ஆண்டுகளுக்கு மேலான தனது சிறை வாழ்க்கையில் பல முறை இங்கிருந்து இலங்கைக்கு செல்லுமாறு சித்திரவதை செய்யப்பட்ட நிலையில் மனச் சிதைவடைந்து "சிறுக சிறுக இங்கிருந்து சாவதை விட சிங்களவனே கொன்று போடட்டும்" என வெறுத்துப் போன மனநிலையில் இலங்கைக்கு செல்ல விருப்பமில்லா விருப்பம் தெரிவித்திருந்தவர்.

ஆனால் தமிழ்நாட்டின் ஏதிலியர் முகாமில் கடும் இதய நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் நிவேதன் என்கிற தனது பதினெட்டு வயது மகனுடனிருக்கும் சுபாஷ்கரனின் மனைவியோ பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளிவரும் தனது கணவனோடு மீதமிருக்கும் காலத்திலியாவது நிம்மதியோடு வாழ்வோம் என கனவு கண்டு காத்திருக்கின்றனர்.

இந்த வேளையில் இலங்கைக்கு சென்றால் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கட்டாயமாக உயிராபத்து இருக்கின்றது எனவும் அங்கு செல்ல தனக்கு துளியும் விருப்பமில்லை எனவும் மறுத்து எழுதிக் கொடுத்திருந்த சுபாஸ்கரனை கிருஷ்ணகுமாரோடு ஒன்றாக இணைத்து விமானத்தில் ஏற்றும் சூழ்ச்சியறிந்து சுபாஷ்கரன் சிறப்பு முகாமிலிருக்கும் உயரமான ஒரு மரத்தில் ஏறி தனது விருப்பமின்மையை மீண்டும் போராட்டத்தின் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார்” என கூறியுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி