ரோமேனியாவில் இலங்கையர் செலுத்திய வான் கோர விபத்து: சாரதி கைது
ஐரோப்பிய நாடான ரோமேனியாவின் கொன்ஸ்டன்டா பகுதியில், இலங்கையர் ஒருவர் செலுத்திய வான் எதிர்த்திசையில் பயணித்து கார் ஒன்றுடன் மோதியதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Navodari மற்றும் Lumina நகரங்களுக்கு இடையில் கடந்த திங்கட்கிழமை காலை 6.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தம்
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, 35 வயதுடைய இலங்கையர் ஒருவர் கொன்ஸ்டன்டாவிலிருந்து Tulcea நோக்கி வேனை செலுத்திச் சென்றுள்ளார்.

இதன்போது, வலதுபுற வளைவு ஒன்றில் வானின் கட்டுப்பாட்டை இழந்த அவர், எதிர்த்திசையில் நுழைந்து 22 வயதுடைய பெண் ஒருவர் செலுத்தி வந்த கார் மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தில் 45 வயதுடைய ஆண் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
வேனில் பயணித்த சாரதி உட்பட இலங்கையைச் சேர்ந்த மேலும் ஆறு ஆண்களும், காரை செலுத்திய பெண்ணும் காயமடைந்துள்ளனர் எனப் அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபரின் சாரதி அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குற்றவியல் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |