புதிய முறையில் தென்னங்கன்று உற்பத்தி : உலகில் முதலிடம் பிடித்தது இலங்கை
இளைய வளர்ப்பு தொழிநுட்பத்தின் மூலம் தென்னங் கன்றுகளை தயாரிப்பது தொடர்பில் லுணுவில தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு மிகவும் வெற்றியளித்ததாக ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி சனாதனி ரணசிங்க தெரிவித்தார்.
இளைய வளர்ப்பு மூலம் தென்னை நாற்றுகள் தயாரிக்கப்படுவது இதுவே உலகில் முதல் தடவை என திருமதி ரணசிங்க தெரிவித்தார்.
மகிந்த அமரவீர பார்வை
இந்த புதிய உற்பத்தியை பார்வையிட விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்மகிந்த அமரவீர லுணுவில தென்னை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விஜயம் செய்தார்.
தென்னைப் பூவின் நுண்ணிய பகுதியை ஆராய்ச்சிக் குழாயில் வைத்து உற்பத்தி செய்யப்பட்டுள்ள தென்னங் கன்றுகளை அமைச்சர் பார்வையிட்டார்.
வெற்றிகரமான வளர்ப்பு
பாரம்பரிய தென்னை சாகுபடி முறையில் தென்னங் கன்றுகளை உற்பத்தி செய்ய அதிக இடம் தேவைப்பட்டாலும்,ஆராய்ச்சிக் கூடத்தில் சுமார் ஆறு அங்குல உயரமுள்ள கண்ணாடிக் குழாயில் தென்னங் கன்றுகள் வெற்றிகரமாக வளர்க்கப்பட்டது.
துறைத்தலைவர் கலாநிதி விஜித விதானாராச்சி தலைமையில் கலாநிதி சனாதனி ரணசிங்க தலைமையிலான விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |