நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
Sri Lanka
Pakistan
Sri Lanka Food Crisis
By pavan
எதிர்வரும் நாட்களில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என மரபு ரீதியான தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து இரண்டு மாதங்களில் இரண்டு மில்லியன் தேங்காய்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இதனால் எதிர்வரும் நாட்களில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என மரபு ரீதியான தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியங்கள்
எதிர்வரும் நாட்கள், நாட்டில் தேங்காய் விளைச்சல் குறைவான காலப் பகுதி என்பதனால் சந்தைக்கு போதியளவு தேங்காய் நிரம்பல் செய்ய முடியாத நிலை காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேங்காய்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியங்கள் வெகுவாக காணப்படுகின்றதாகவும் சங்கத்தின் அழைப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

