வெனிசுலாவைத் தொடர்ந்து கியூபாவிற்கு குறி வைத்த ட்ரம்ப்...!
கியூபா ஒரு ஒப்பந்தத்துக்கு வரவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இல்லையெனில் வெனிசுலா எண்ணெய் மற்றும் பணப் பாய்ச்சல் நிறுத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க படைகளால் வெனிசுலாவின் ஜனாதிபதியும் அவரது மனைவியும் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்லம்ப் கியூபாவின் மீது தனது கவனத்தைத் திருப்பியுள்ளார்.
அமெரிக்காவுடன் ஒப்பந்தம்
இது தொடர்பில் சமூக வலைதளமொன்றில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில், கியூபாவின் நீண்டகால நட்பு நாடான வெனிசுலா, கியூபாவுக்கு ஒரு நாளைக்கு சுமார் 35,000 பீப்பாய்கள் எண்ணெயை அனுப்புவதாக நம்பப்படுகின்றது எனினும் அது முடிவுக்கு வரும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

கியூபா பல ஆண்டுகளாக வெனிசுலாவிலிருந்து வரும் அதிக அளவு எண்ணெய் மற்றும் பணத்தில் வாழ்ந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கு ஈடாக கியூபா, இரண்டு வெனிசுலா சர்வாதிகாரிகளுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்கியது ஆனால் இனிமேல் அது நடக்காது என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனவே கியூபா, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என தாம் கடுமையாக பரிந்துரைப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவர் கூறும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளையோ அல்லது கியூபா எதிர்கொள்ளக்கூடிய விளைவுகளையோ ட்ரம்ப் சுட்டிக்காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |