பெருநிறுவனங்களின் சரிவு : கலக்கமடையும் சீன பொருளாதாரம்!
சீன பொருளாதாரத்தில் ரியல் எஸ்டேட் துறையானது பாரிய நெருக்கடிக்குள்ளாகி வரும் நிலையில், பெரு நிறுவனங்களின் சரிவானது அதன் பொருளாதார தளத்தை ஆட்டம் காண செய்துள்ளது எனலாம்.
அவ்வகையில், சீனாவின் மிகப்பெரிய தனியார் குழுமங்களில், சாங்க்ஷி என்டர்பிரைஸ் குழுமமும் ஒன்றாகும்.
இக்குழுமம், நிதிச் சேவை, சுரங்கம், மின்சார வாகனங்கள் ஆகிய பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது.
கடன் மற்றும் பங்கு முதலீடு
இக்குழுமத்தின் அறக்கட்டளையான, சாங்ராங் இன்டர்நேஷனல் டிரஸ்ட் கடந்த 2022 இறுதி நிலவரப்படி, கிட்டத்தட்ட 7.22 லட்சம் கோடி மதிப்பிலான நிதியை நிர்வாகித்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில், அதன் கார்ப்பரேட் முதலீட்டாளர்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தத் தவறிவிட்டதாக கூறியிருந்தது.
இந்நிலையில் தற்போது, இக்குழுமம், 5.31 லட்சம் கோடி ரூபாய் கடனுடன் திவாலாகி உள்ளதாக, அதன் முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளது.
மேலும், குழுமத்தின் சொத்துக்கள் கடன் மற்றும் பங்கு முதலீடுகளில் குவிந்திருப்பதாலும், அவை நீண்ட கால அளவைக் கொண்டிருப்பதாலும், அவற்றை மீட்பது கடினம் என்றும் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சீன பொருளாதாரம், ரியல் எஸ்டேட் துறையால் நெருக்கடிக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த செய்தியால், அறக்கட்டளை அல்லது 'ஷேடோ பேங்கிங்' பிரிவும் கலக்கமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..! |