கொலம்பியாவில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழப்பு
கொலம்பியாவின் நாரினோ மாகாணம் சாண்டா பார்பரா டி இஸ்குவாண்டே நகரத்திற்கு அருகே தங்கச் சுரங்கமொன்று திடீரென்று இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சுரங்கமானது உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்துள்ளது.
இந்த நிலையில் சுரங்கம் இடிந்துவிழுந்ததில் இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.
7 பேருக்கு பலத்த காயம்
உடனே மீட்புக்குழுக்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டன.

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக இடிபாடுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்ததோடு, 7 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒகஸ்ட் மாதமும் நாரினோ மாகாணத்தின் பொலிகார்பா நகரில் இதேபோன்ற சுரங்க விபத்தில் 13 பேர் உயிரிழந்திருந்துள்ளனர்.
கொலம்பியாவின் கிராமப்புறங்களில் முறையான பாதுகாப்பு உட்கட்டமைப்புகள் இன்றி இயங்கும் ஒழுங்கமைக்கப்படாத சுரங்கங்களால் இவ்வாறான விபத்துகள் அடிக்கடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |