புகை மண்டலமாக காட்சியளிக்கும் கொழும்பு
Colombo
Fire
By Sumithiran
கொழும்பு புறக்கோட்டை முதலாம் குறுக்கு தெருவில் உள்ள வர்த்தக நிலையங்கள் பற்றியெரிவதால் கொழும்பின் முக்கிய பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறிப்பாக கதிரேசன் வீதி, செட்டியார் தெரு வீதி,ஆட்டுப்பட்டி தெரு,மற்றும் விவேகானந்த மேடு ஆகிய பகுதிகளே புகைமண்டலமாக காட்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறு பாரியளவில் புகை வெளியேறுவதால் சுவாசிப்பதற்கு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தீ பரவலுக்குள்ளான முதலாம் குறுக்கு தெரு மக்களை அங்கிருந்து பாதுகாப்பு கருதி வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்படுத்தும் வகையில் விமானப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதுடன் விமானப்படை விமானம் ஒன்று தீணை அணைக்குமுயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


