மட்டக்குளியில் பதற்றம்- கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்!
கொழும்பு - 15, மட்டக்குளி பகுதியிலுள்ள காக்கைத்தீவு கடற்கரையில் சடம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினமே சடலம் ஒதுங்கியுள்ளதாக மட்டக்ககுளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கரையொதுங்கிய சடலத்தின் முகம் துணியொன்றினால் மறைத்து கட்டப்பட்டும், கை மற்றும் கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலமே இவ்வாறு ஒதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.
சடலமாக கரையொதுங்கிய நபர் நீல நிற டெனிம் காற்சட்டை மற்றும் வெள்ளை நிற ரீ சேர்ட் அணிந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை உயிரிழந்துள்ள நபரை அடையாளம் காணும் நோக்கிலும், குறித்த நபரின் உயிரிழப்பு தொடர்பாகவும் மட்டக்குளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.