மீள ஆரம்பமாகின்றது யாழ் - கொழும்பு தொடருந்து சேவை..!
Colombo
Jaffna
Sri Lanka
Train Crowd
By Kiruththikan
கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையான தொடருந்து சேவைகள் வழமையான நேர அட்டவணையின் அடிப்படையில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அனுராதபுரம் - ஓமந்தை இடையிலான தொடருந்து மார்க்கம் திருத்தப்பணிகளுக்காக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டிருந்து குறிப்படத்தக்கது.
இந்நிலையில், அனுராதபுரம் - ஓமந்தை இடையிலான தொடருந்து போக்குவரத்து அடுத்த மாதம் மீள ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
100 கி.மீ வேகத்தில் பயணம்
62 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த தொடருந்து மார்க்கம் இந்திய கடன் உதவியின் கீழ் 33 பில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
புனரமைக்கப்பட்ட தொடருந்து மார்க்கத்தில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் தொடருந்துகள் பயணிக்க முடியுமென தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
