வீரவன்சவின் மனைவிக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
சட்டவிரோத வெளிநாட்டுக் கடவுச்சீட்டு விவகாரத்தில் சஷி வீரவன்சவின் மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவானது இன்று (06.11.2026) கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் மஞ்சுள திலகரத்னவால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத வெளிநாட்டுக் கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றத்திற்காக சஷி வீரவன்சவிற்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி
குறித்த மனு மீதான தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் மஞ்சுள திலகரத்ன, இந்த விவகாரத்தில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாகக் குறிப்பிட்டார்.

முறையற்ற ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட சஷி வீரவன்சவுக்கு, கடந்த 2022 ஆம் ஆண்டில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தண்டனையிலிருந்து தம்மைக் விடுவிக்குமாறு கோரி அவர் கொழும் மேல் நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்த நிலையிலேயே, அம்மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 18 மணி நேரம் முன்