கொழும்பு வைத்தியசாலையில் மரணமடைந்த கொரோனா தொற்றாளர்கள் குறித்து வெளிவந்துள்ள செய்தி
கடந்த ஒரு மாத காலத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த 239 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களில் 220 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் என விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஜீவ வாயு சக்தி விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் நிலீகா மலவிகே தெரிவிக்கையில்;
கொரோனா வைரஸிற்கு உள்ள ஒரே தீர்வு தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதே என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தும் மற்றுமொரு வேலைத்திட்டம் தொடர்பில் அனைத்து தொலைக்காட்சிகள் ஊடாக நேரடி ஒளிபரப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளன.
'வைரஸ் ஒழிக்கப்பட்டு வசந்தம் வருகின்றது' என்ற தொனிப்பொருளில் மேற்படி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தடுப்பூசி பெற்றுக்கொள்வதின் முக்கியத்துவம் தொடர்பில் விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
அது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐ. டி. எச் மருத்துவமனையன் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம,
கடந்த மாதம் மாத்திரம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த 239 கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களில் 220 பேர் எந்நவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என்று தெரிவித்துள்ளார்.