கொழும்பு - கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு
கொழும்பு (Colombo) – கண்டி வீதியின் கணேதென்ன மற்றும் கடுகண்ணாவ இடையிலான பகுதி முழுமையாக திறக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் இன்று (12.08.2025) காலை 7.00 மணிக்கு வீதி முழுமையாக திறக்கப்பட்டதாக விமல் கண்டம்பி குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு பேருந்து சேவை
பேரிடர் காரணமாக சேதமடைந்த 256 பிரதான வீதிகளில் 219 வீதிகள் தற்போது போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரயில் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்காக இன்று முதல் சிறப்பு பேருந்து சேவை இயக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் சொகுசு பேருந்துகளைத் தவிர, மாதாந்திர ரயில் பருவ டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பிற வழக்கமான பேருந்துகளில் பயணிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இரட்டைப் பாதையாக அபிவிருத்தி
இதேவேளை, 'களு பாலம்' என அழைக்கப்படும் பேராதனை மற்றும் சரசவி உயன தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்டுள்ள தொடருந்து பாலத்தை இரட்டைப் பாதையாக அபிவிருத்தி செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று (08.12.2025) அது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |