உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாத வினாத்தாள்களை 2026 ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு தற்போது முயற்சிக்கப்பட்டு வருகிறது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் (Ministry of Education) செயலாளர் நாலக்க களுவெவ குறிப்பிட்டுள்ளளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாகாணங்களிலும் சுமார் ஆயிரம் பாடசாலைகள் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
பாடசாலைகள் திறக்கப்படும் திகதி
அதற்கமைய, பாடசாலை செல்லும் சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள் இந்த அனர்த்தத்தினால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், அனர்த்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்படாத பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை இம்மாதம் 16 ஆம் திகதி திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எந்தப் பிரதேசத்தில், எந்தப் பாடசாலைகள் திறக்கப்படும் என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை நாளை (8) அல்லது செவ்வாய்க்கிழமை (9) வெளியிட எதிர்பார்த்துள்ளோம்.
இப்பாடசாலைகளைத் திறப்பதுடன், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாத வினாத்தாள்களை 2026 ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு தற்போது முயற்சிக்கப்பட்டு வருகிறது எனவும் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |