தனியார் கல்வி நிலையத்தின் மோசடி அம்பலம் - குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் உடனடி நடவடிக்கை
கொழும்பில் சர்வதேச கல்வி நிலைய பணிப்பாளர்கள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் (CID) அதிரடி விசாரணை ஒன்றின் மூலம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை நாவல வீதியில் அமைந்துள்ள ஏதென்ஸ் தனியார் சர்வதேச கல்வி நிலையத்தின் பணிப்பாளர்களான திலும் குமார மற்றும் மேதனி தரங்க ஆகிய இருவரும் பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்ததாக கூறி மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நவம்பர் 30ஆம் திகதி வரை முதலீடுகள் எனக் கூறி 3 பில்லியன் பெருமதியான பணம் மேசடி செய்யப்பட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணை
இதற்கமைய சந்தேகநபர்கள் இருவரையும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்நிலைப்படுத்தியதை அடுத்து கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (16) இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், இக்கல்வி நிலையத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் பொலன்னறுவை புதிய நகர் பகுதியைச் சேர்ந்த சஹான் அகலங்க என்ற சந்தேக நபர் பல்வேறு நபர்களிடம் இருந்து இவ்வாறு பண மோசடி செய்துள்ளமை மேலதிக விசாரணைகள் முலம் தெரியவந்துள்ளதுடன் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிறுவனம் இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யாமல் இவ்வாறு பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
இதற்கமைய சட்டத்தரணி வழங்கிய விளக்கங்களை
கருத்திற்கொண்ட நீதவான் கமகே, சந்தேகநபர்களின் பிணை கோரிக்கையை நிராகரித்ததுடன், அவர்களை நவம்பர் 30 ஆம் திகதி
வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுடள்ளதாக தெரிவிக்கபபடுகின்றது.
