உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்
Death
Covid-19
Colombo #
Kuliyapitiya Hospital
By Vasanth
திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் நேற்று காலை 8.30 மணியளவில் உயிரிழந்தார்.
எனினும் பின்னர் நடத்தப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த பி சி ஆர் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெறுவதற்கு முன்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. உயிரிழந்தவர் பன்னல வலக்கும்புரமுல்லவில் வசிக்கும் 67 வயதான ஏ.சந்திரபால என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எனினும் இறந்தவரின் சடலம் நேற்று இரவு 11 மணியளவில் உறவினர்களிடம் இருந்து மீளப்பெறப்பட்டு போப்பிட்டிய மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி