அஜித் ரோஹணவை நன்கு அறிந்தவர் எனக் கூறியவரால் சட்டத்தரணிக்கு மரண அச்சுறுத்தல்!

police colombo attack lawyer sri Lanka
By Kalaimathy Jul 08, 2021 04:13 AM GMT
Report

பொலிஸ் நிலையத்தில் ஒரு சட்டத்தரணியை தாக்க முயன்ற மற்றும் அவரது தொழில்முறை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த, பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் நண்பர் என நம்பப்படும் நபர் ஒருவர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, சட்டத்தரணிகள் அமைப்பு ஒன்று பொலிஸமா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

சட்டத்தரணி மொஹமட் நஜீம் மொஹமட் பஸீர் ஜூலை 4ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் தனது வாடிக்கையாளர்களில் ஒருவர் சார்பாக தொழில்முறை கடமைக்காக கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இரவு 9 மணியளவில், குறித்த சட்டத்தரணி தனது பணிகளை மேற்கொண்டிருந்த சந்தர்பத்தில், அங்கு வந்த மொஹமட் லாபீர் உசைன் மொஹமட் இம்தியாஸ் என்ற நபர், உப பொலிஸ் பரிசோதகர் பி.ஆர்.ஏ சில்வா மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக ஜயகொடி முன்னிலையில் சட்டத்தரணியை அவமானப்படுத்தி, அச்சுறுத்தியதோடு அவரைத் தாக்க முயற்சித்துள்ளதாக, மக்கள் சட்டத்தரணிகள் மன்றம் தெரிவித்துள்ளது.

உயர் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் அச்சுறுத்தியதோடு, தாக்குதல் நடத்த குறித்த நபர் முயற்சித்துள்ள நிலையில், எந்தவொரு அதிகாரியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த மன்றத்தின் நிர்வாக உறுப்பினர் சட்டத்ததரணி சேனக பெரேரா, பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சட்டத்தரணி அன்றைய தினமே (04 ஜுலை) இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பின்னர், குறித்த நபர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை தான் நன்கு அறிந்திருப்பதாகக் கூறி மீண்டும் சட்டத்தரணியை அச்சுறுத்தியதாக சட்டத்தரணி சேனக பெரேரா குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

”முறைப்பாட்டின் பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு வருகைத்தந்த குறித்த நபர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சமன் சிகேரா மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஆகியோரை தான் நன்கு அறிவதாகவும், ஆகவே தனக்கு சரியான பாதுகாப்பு காணப்படுவதாகவும் அவர் மேலும் அச்சுறுத்தியுள்ளார்” என சட்டத்தரணி சேனக பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயமானது, பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி ஒருவர் தனது கடமைகளை மேற்கொள்வது தொடர்பில் , மே 18, 2012 திகதியிடப்பட்ட உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் எண் 1758/31 இன் விதிமுறைகளை முற்றிலுமாக மீறுவதாக அமைந்துள்ளதாக, சட்டத்தரணி சேனக பெரேரா, பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு, ஒரு பொலிஸ் நிலையத்தில் ஒழுக்கயீனமான நடத்தை மற்றும் அச்சுறுத்தலுடன் ஒரு சட்டத்தரணியின் தொழில்முறை நடவடிக்கைகளில் தலையிட்டு ஒரு சட்டத்தரணியை தாக்கும் முயற்சியின் போது, நடவடிக்கை எடுப்பதற்கான இயலுமை இருந்தபோதிலும், பொலிஸ் நிலைய அதிகாரிகள் தங்கள் சட்டப் பொறுப்பை புறக்கணித்துள்ளனர் என அவர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சட்டத்தரணியின் தொழில்முறை நடவடிக்கைகளை தடுக்கவும், அச்சுறுத்துவதற்கும், தாக்குவதற்கும் பொலிஸ் அதிகாரிகள் ஊக்குவித்துள்ளதாக, மக்கள் சட்டத்தரணிகள் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. "சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் குறித்த நபர் கைது செய்யப்படவில்லை என்பது மேலும் தெளிவாகிறது" எனவும் குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே, இந்த சம்பவம் குறித்து உடனடியாக முழு விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொறுப்பான நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு மக்கள் சட்டத்தரணிகள் சங்கம், பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025