லண்டன் விமானங்கள் ரத்து: சிறிலங்கா எயார்லைன்ஸ் விடுத்த அவசர அறிவிப்பு
தீ விபத்து ஒன்று காரணமாக பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் இன்று (21) கொழும்பில் இருந்து லண்டன் புறப்படவிருந்த இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிறிலங்கா எயார்லைன்ஸின், லண்டனுக்கு இன்று (21) மதியம் 12:50 மணிக்கு புறப்படவிருந்த UL 503 விமானம் மற்றும் 20:40 மணிக்கு புறப்படவிருந்த UL 504 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள சிறிலங்கா எயார்லைன்ஸ், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
காரணம்
இதேவேளை, ஹீத்ரோ விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் லண்டனுக்கு விமானங்கள் மீண்டும் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
உதவி தேவைப்படும் பயணிகள் சிறிலங்கன் எயார்லன்ஸ் வாடிக்கையாளர் மையத்தை 1979 (இலங்கை), +94117 77 1979 (சர்வதேசம்) அல்லது +94744 44 1979 (வாட்ஸ்அப் ) என்ற எண்களின் தொடர்பு கொள்ளலாம்.
இல்லையெனில், அருகிலுள்ள சிறிலங்கள் எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது அவர்களின் பயண முகவரைத் தொடர்பு கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறானதொரு பின்னணியில், லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் ஒரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து காரணமாக இன்றைய நாள் முழுவதும் முடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்