தென்னிலங்கையில் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்திய விக்னேஸ்வரன்!
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சி. வி. விக்னேஸ்வரன் கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் இன்று சனிக்கிழமை மாவீரர் தினத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு வடக்கு கிழக்கில் காவல்துறையினர் நீதிமன்றங்கள் ஊடாக தடைகோரியிருந்த நிலையிலும் மாவீரர்களுக்கான நினைவேந்தல் பெரும் எழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டது.
வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினரும் காவல்துறையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.
இருப்பினும் தடைகளை உடைத்து மக்களும் அரசியல் பிரமுகர்களும் மாவீரர் நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் அனுஸ்டித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் கொழும்பில் ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.


