திருகோணமலையில் போதைப்பொருளுடன் சிக்கிய கொழும்பை சேர்ந்த நபர்
Sri Lankan Tamils
Tamils
Sri Lanka
By H. A. Roshan
திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 12 குணசிங்க புரவை சேர்ந்த 63 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் நேற்று (17) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 30 கிராமும் 700 மில்லி கிராமும் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்பலகாமம் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
மேலும், கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று (18) அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
4 நாட்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
6 நாட்கள் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி