இலஞ்ச குற்றச்சாட்டு : கொழும்பு வடக்கு நீதிமன்ற நீதிபதி, அவரது மனைவி கைது!
ரூபா 65,000 இலஞ்சம் கோரிய மற்றும் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும் ஆணைக்குழு, கொழும்பு வடக்கு நீதிமன்ற நீதிபதியையும் அவரது மனைவியையும் கைது செய்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும்ஆணைக்குழு, நீதிபதியின் மனைவி கொழும்பு வடக்கு நீதிமன்றத்தின் செயலாளராகவும் பணியாற்றியதாகத் தெரிவித்துள்ளது.
விவாகரத்து வழக்கு
ஒரு விவாகரத்து வழக்கு தொடர்பான தீர்ப்பை எவ்வித தாமதமுமின்றி வழங்குவதற்காக அவர்கள் இந்த இலஞ்சப் பணத்தைக் கோரியிருந்தனர்.

இது தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்தச் சோதனையை நடத்தியுள்ளனர்.
அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய நீதிபதியும் அவரது மனைவியும் இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற கொலை சம்பவம்! ஈ.பி.டி.பியின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கு மரண தண்டனை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |