2024 முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகம் ஈட்டியுள்ள பாரிய வருமானம்!
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கொழும்பு (Colombo) துறைமுகம் உலகின் வேகமாக வளர்ச்சியடையும் துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளதாக கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ்.ருவன்சந்திர (K. D. S. Ruwanchandra) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (29) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே ருவன்சந்திர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், 2023ஆம் ஆண்டில் இலங்கை துறைமுக அதிகாரசபை 100 மில்லியன் அமெரிக்க டொலர் இலாபத்தைப் பதிவுசெய்துள்ளதுடன் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார.
[8JC3SOW ]
கொழும்பு துறைமுகம்
அந்தவகையில், 23.6% எனும் வேகமான வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்ததன் மூலம் கொழும்பு துறைமுகம் செயல்பாட்டுச் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
குறிப்பாக, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகள் அந்த முன்னேற்றத்தை எட்டுவதற்குத் தடையாக அமையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கிழக்கு முனையம் மற்றும் வடக்கு துறைமுகத்தின் அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படுவதுடன் திருகோணமலை, காலி, காங்கசன்துறை ஆகிய துறைமுகங்களிலும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ்.ருவன்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |