நாளையதினம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது - கோட்டை நீதிமன்றம் உத்தரவு!
Colombo
Galle Face Protest
Independence Day
Sri Lanka Magistrate Court
SL Protest
By Pakirathan
1 மாதம் முன்
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாளைய தினம் கொழும்பில் இடம்பெறவுள்ளது.
அந்தவகையில், காலிமுகத்திடல் பகுதியில் நாளையதினம் (04) எந்தவித எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம்(3) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், நாளையதினம் காலிமுகத்திடலிலும், அதனை அண்மித்த பகுதிகளிலும், எந்தவொரு போராட்ட இயக்கமும் அல்லது எந்தவொரு தனி நபர்களும் நுழைவதை தடுக்கும் வகையில் குறித்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி! 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்