மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த கொட்டாஞ்சேனை மாணவி: எடுக்கப்பட்ட நடவடிக்கை
கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 6 வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த டில்ஷி அம்ஷிகா என்ற 16 வயது மாணவியின் மரணம் தொடர்பில் ஆராய 10 பேரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - கொட்டாஞ்சேனையில் கடந்த 29ம் திகதி பாடசாலை மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
உயிரை மாய்த்த மாணவி பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்,
மன உளைச்சல்
குறித்த சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை (National Child Protection Authority) தனி விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அதிகாரசபையின் தலைவர் பிரீத்தி இனோகா ரணசிங்க, இதற்காக பத்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
🛑 you may like this...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
