தொடர் வீழ்ச்சி காணும் கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு (Colombo) பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்ணும் இன்று (07) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 7.63புள்ளிகளால் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 16,115.47 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
மொத்தப் புரள்வு
மேலும், கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 2.1 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் நேற்றும் (06) வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது.
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 43.43 புள்ளிகளால் வீழ்ச்சியை பதிவு செய்ததுடன் மொத்த விலைச் சுட்டெண் 16,123.10 புள்ளிகளாகப் பதிவாகியது.
இந்த நிலையில் கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது நேற்றைய தினம் 2.3 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
6 நாட்கள் முன்