அதிரடி மாற்றம் கண்ட மரக்கறி விலை : மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்
பல காய்கறிகளின் விலைகள் சடுதியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தம்புள்ளை (Dambulla) சிறப்பு பொருளாதார வர்த்தக மையத்தின் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், மிளகாய், பச்சை மிளகாய், பீன்ஸ் மற்றும் தக்காளி ஆகியவற்றின் விலைகள் சடுதியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை விலை
மொத்த விலைகளுடன் ஒப்பிடும்போது சில்லறை சந்தை விலைகள் சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ரூபாய் 900 இற்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மீன் மற்றும் மிளகாய் மொத்த விற்பனை விலை நேற்று (05) முதல் ரூபா 450 ஆகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த விலை
கடந்த வாரம் ரூபா 1100 ஆக இருந்த ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை ரூபாய் 700 ஆகவும், ஒரு கிலோ பீன்ஸ் ரூபாய 300 ஆகவும் மற்றும் தக்காளி ரூபாய் 180 ஆகவும் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தம்புள்ளை சிறப்பு பொருளாதார வர்த்தக மையத்திற்கு நுவரெலியா, கெப்பட்டிபொல மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து உருளைக்கிழங்கு, கரட் மற்றும் முருங்கைக்காய் என்பவை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்
