நெருக்கடியில் இலங்கை - அரசுக்கு எதிராக வெடிக்கும் போராட்டங்கள்
protest
srilankan government
By Kanna
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சீர் செய்வதற்கு அரசாங்கம் தவறியதற்கு எதிராக கொழும்பு நகர மக்கள் மீண்டும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுரவிற்கு வெகு தொலைவில் உள்ள கொஹுவல நகரத்தில் ஒரு சிறிய விழிப்புணர்வுப் போராட்டம் என ஆரம்பித்த, இப் போராட்டம் தலைநகரைச் சுற்றியுள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் பரவியுள்ளது.
சனிக்கிழமை கொஹுவல, ராஜகிரிய, ஜா-எல மற்றும் கல்கிசை பிரதேசங்களில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
அண்மை நாட்களாக நாட்டின் பல்வேறு இடங்களில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்